Spiderman Far From Home Review

Spiderman Far From Home Review

நடிகர் டாம் ஹொலண்ட்
நடிகை செண்டாயா
இயக்குனர் ஜான் வாட்ஸ்
இசை மைக்கேல் ஜியாச்சினோ
ஓளிப்பதிவு மேத்யு ஜே லாயிடு

கதை

பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர் மேன்) நியூ யார்க்கில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் உடன் படிக்கும் மரியா ஹில்லை காதலித்து வருகிறார்.

இந்த வேளையில், அவர் படிக்கும் கல்லூரியிலிருந்து, மாணவர்களை ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கு பஞ்சபூத அரக்கர்கள் நீர் மூலம் ஐரோப்பாவின் வெனிஸ் நகரை தாக்குகின்றனர்.

Spiderman Far From Home Review

அவர்களின் இந்த தாக்குதலை ஸ்பைடர் மேனால் தடுக்க முடியவில்லை.

இருப்பினும் குவின்டின் பெக் பஞ்சபூத அரக்கர்களின் சதியை முறியடிக்கிறார்.

பஞ்ச பூத அரக்கர்களை எதிர்த்து குவின்டின் பெக் செய்யும் சண்டைகள் ஸ்பைடர் மேனை ஈர்க்கிறது. கடந்த முறை சதி முறியடிக்கப்பட்டதால், நெருப்பு மூலம் பஞ்சபூத அரக்கர்கள் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றனர்.

Spiderman Far From Home Review

இதனை ஸ்பைடர் மேன் முறியடிக்க முயலும் வேளையில், குவின்டின் பெக் சாதுரியமாக செயல்பட்டு பஞ்ச பூத அரக்கர்களின் சதியை முறியடிக்கிறார்.

அந்தத் தருணத்தில் அயர்ன் மேனின் சக்தி வாய்ந்த கண்ணாடி ஸ்பைடர் மேனுக்குக் கிடைக்கிறது.

திரைக்கதை

ஆனால் ஸ்பைடர் மேன் அந்த சக்தி வாய்ந்த கண்ணாடியை குவின்டினுக்கு தந்துவிடுகிறான்.

ஆனால், உண்மையில் குவின்டின் பெக், நல்லவன் இல்லை என்பதும், பஞ்சபூத அரக்கர்கள் தாக்குவதுபோல,

பொய் காட்சிகளை உருவாக்கி பயமுறுத்தியதும் பிறகுதான் ஸ்பைடர் மேனுக்குத் தெரிகிறது.

Spiderman Far From Home Review

அதற்குள், அயர்ன் மேனின் சக்தி வாய்ந்த கண்ணாடியை வைத்து செயற்கைக்கோள்களில் உள்ள ஆயுதங்களையும்,

டுரோன்களையும் கட்டுப்படுத்தி, தாக்குதல் நடத்த ஆரம்பிக்கிறான் குவின்டின்.

இந்தத் தாக்குதல்களிலிருந்து ஐரோப்பாவை ஸ்பைடர் மேன் காப்பாற்றினாரா? காதலியை கரம்பிடித்தாரா? என்பது மீதிக்கதை.

இயக்கம்

படம் முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் காதல் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.

டாம் ஹோலண்டு

துருதுரு இளைஞராக ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹோலண்டு நடித்து அசத்தியுள்ளார்.

குவின்டின் பெக்

குவின்டின் பெக் ஸ்மார்டான வில்லனாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

செண்டாயா

ஹீரோயினும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஐரோப்பாவின் ஒவ்வொரு நகரமாக ஸ்பைடர் மேனும் குவின்டின் பெக்கும் சாகசம் நிகழ்த்துவது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

ஸ்பைடர் மேன்

ஸ்பைடர் – மேன் பட வரிசைகளில் படத்தின் துவக்கத்திலிருந்தே சிறுசிறு சாகசங்களின் மூலம் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள்.

Spiderman Far From Home Review

இந்த படத்தில் முதலில் வரும் சாகசத்திற்குப் பிறகு, படத்தின் பிற்பாதி வரை, சற்று மெதுவாகவே நகர்கிறது.

இருந்தபோதும், மார்வெல் பாணி சூப்பர் ஹீரோ பட ரசிகர்கள் இந்தப் படத்தை நிச்சயம் ரசிப்பார்கள்.

மொத்தத்தில் “ஸ்பைடர் மேன் பார் பிரெம் ஹோம்” மார்வெல் ரசிகர்களுக்கு மட்டும்.

Sending
User Review
3 (1 vote)

Rajesh Kumar

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: