Vivek Oberoi – கமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த விவேக் ஓபராய்!

(Vivek Oberoi) நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது,

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவன் தான் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன்.

அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்றார். கமலின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது : “நீங்கள் சிறந்த நடிகர். கலைக்கு எப்படி மதம் இல்லையோ, அதேப்போன்று பயங்கரவாதத்திற்கும் மதமில்லை.

Vivek Oberoi condemns Kamal Haasan speech

கோட்சேவை நீங்கள் பயங்கரவாதி என்று சொல்லலாம். ஆனால் எதற்காக இந்து என குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

நீங்கள் ஓட்டு கேட்கும் பகுதி முஸ்லீம் வாழும் பகுதி என்பதாலா?. நான் ஒரு சிறு நடிகன், பெரிய நடிகராகிய உங்களுக்கு என் பணிவான வேண்டுகோள்!

தயவு செய்து நாட்டை பிரிக்க வேண்டாம், நாம் அனைவரும் ஒன்றே. ஜெய்ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.

Sending
User Review
0 (0 votes)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: