Sriranjini – பெண் குழந்தைக்கு தாயான ஸ்ரீரஞ்சனி!

(Sriranjini) பிரபல சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் அமித் பார்கவ், ஸ்ரீரஞ்சனி ஜோடி.

கன்னட சின்னத்திரை நடிகரான அமித் பார்கவ், கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் தமிழுக்கு வந்தார்.

அதன்பிறகு அச்சம் தவிர், மாப்பிள்ளை தொடர்களில் நடித்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நடித்து வருகிறார்.

இது தவிர பல புதிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Sriranjini is blessed with girl child

அமித் சின்னத்திரை தொகுப்பாளினியும், நடிகையுமான ஸ்ரீரஞ்சனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2016ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது. கடந்த 7ந் தேதி அட்சய திரிதியை அன்று ஸ்ரீரஞ்சனி அழகான பெண் குழந்தையை பெற்றார்.

தாயும், சேயும் நலம். இதனை அமித் பார்கவ் தனது டுவிட்டரில் தற்போது தெரிவித்துள்ளார்.

“எனக்கு ஒரு சென்னை சூப்பர் குயின் கிடைத்திருக்கிறாள்”. என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Sending
User Review
0 (0 votes)

Vishnuprabhu

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: