நடிகை வனிதா கைதா? பிக்பாஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு!

(Biggboss) நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் ஆகாஷை முதலில் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர்.

பின்னர், வனிதா, ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்ற மகள் இருக்கிறார்.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்ட்டு 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்துக்கு பிறகு மகள் ஜெனிதா, தந்தையின் பராமரிப்பில் ஐதாராபத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத் சென்ற வனிதா, மகளை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து விட்டார்.

இதைத் தொடர்ந்து ஆனந்தராஜ் தன் மகளை வனிதாக கடத்திச் சென்று விட்டதாக தெலுங்கானா போலீசில் புகார் செய்தார்.

Police to arrest Vanitha in Biggboss house

இதையடுத்து வனிதா மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய தேடி வந்தனர்.

ஆனால் அவர் சிக்கவில்லை. வனிதா, தற்போது விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்.

இதையறிந்த தெலுங்கானா போலீசார், வனிதாவிடம் விசாரணை நடத்தவும்,

தேவைப்பட்டால் கைது செய்து அழைத்துச் செல்லவும் ஆனந்தராஜுடன் நேற்று சென்னை வந்தனர்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் பகுதியை சேர்ந்த நசரத்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரை தெலுங்கானா போலீசார் சந்தித்தனர்.

அப்போது வனிதாவிடம் விசாரணை நடத்த உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து தெலுங்கானா போலீசாரும், நசரத் பேட்டை போலீசாரும் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வனிதாவுக்காக காத்திருந்தனர்.

இன்று அவரிடம் விசாரணை நடத்தப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம் என்ற நிலையில் பிக்பாஸ் வட்டாரம் பரபரப்பில் இருக்கிறது.

Sending
User Review
0 (0 votes)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: