அல்லு அர்ஜுன் ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்!

(Nivetha Pethuraj) தமிழில் ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது, பொன் மாணிக்கவேல், சங்கத்தமிழன், ஜகஜால கில்லாடி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஆர்வம் காட்டி வரும் நிவேதா, மெண்டல் மதிலோ என்ற படத்தில் அறிமுகமானார்.

Nivetha Pethuraj to pair with Allu Arjun

அதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தவர், இப்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது 19 வது படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஐகான் என பெயர் வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் போட்டி போட்ட நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ் ஜோடியாக உள்ளார்.

வேணு ஸ்ரீராம் இயக்கும் ஐகான் படத்தில் அல்லு அர்ஜூன், இதுவரை நடித்திராத வேடத்தில் அதாவது, நடுத்தர வயதை கடந்தவராக நடிக்க இருக்கிறார்.

Sending
User Review
0 (0 votes)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: