கிரைம் திரில்லர் படத்தில் நித்யா மேனன்!

(Nithya Menon) மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன்பு நித்யா மேனன் நடிப்பில் ‘பிராண’ என்கிற படம் வெளியானது.

நித்யா மேனன் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் நித்யா மேனன்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறதாம்.

இந்த படத்தை இயக்கும் அஜய் தேவலோகா என்பவர் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தான் படமாக்குகிறார்.

Nithya Menon to act in crime thriller movie

“இந்த கதையில் வரும் துணிச்சலான தைரியமான பெண் கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் தான் சரியா இருப்பார் என தோன்றியது.

கதையைக் கேட்டதும் அவரும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்” என்று கூறியுள்ளார் இயக்குனர் அஜய் தேவலோக்.

இந்த உண்மை சம்பவம் பற்றி வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோவிடம் கூறியபோது,

அவரும் இந்த கதை பற்றி சிலாகித்து படமாக்க ஊக்கம் கொடுத்தாராம்.

அதனால், அவரையே இந்த படத்தில் கதையின் நாயகனாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி சொல்லிவிட்டாராம்.

Sending
User Review
0 (0 votes)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: