நடிகர் சங்க தேர்தல் ரத்தாகுமா! – உயர்நீதிமன்றம் விசாரணை!

(Nadigar Sangam Elections) தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டுதல்படி கடந்த மாதம் 23ந் தேதி தேர்தல் நடந்தது.

இதில் 50 சதவிகித வாக்குகள் பதிவாகியது. தேர்தல் முடிந்தாலும் இன்னும் வாக்குகள் எண்ணப்படவில்லை.

வாக்கு எண்ணுவது தொடர்பாக கோர்ட் உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கவில்லை.

இந்த நிலையில், நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி பெஞ்சமின் என்ற துணை நடிகர் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளேன்.

கடந்த 23ந் தேதி தேர்தலில் வாக்களிக்க எனது சொந்த ஊரான சேலத்திலிருந்து வந்தேன்.

ஆனால், என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

Nadigar Sangam Election case in high court

தபால் ஓட்டுக்கான படிவம் எனக்கு 22ந் தேதி வரை கிடைக்கவில்லை. இதுபோன்று பலருக்கும் நடந்துள்ளது.

எனவே, தேர்தலை ரத்து செய்யக்கோரி பதிவுத்துறை ஐஜி, சங்க பதிவாளருக்கு மனு கொடுத்தேன்.

ஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை (ஜூலை 8) விசாரணைக்கு வருகிறது.

Sending
User Review
0 (0 votes)

Kaviya Sri

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: