Maharishi – தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற மகரிஷி!!!

(Maharishi) வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ் மற்றும் பலர் நடித்த ‘மகரிஷி’ தெலுங்குப் படம், கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியானது.

கார்ப்பரேட், விவசாயம் இரண்டையும் மையப்படுத்திய கதை, ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் 50 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

நேற்று இந்தப் படத்தின் சக்சஸ் மீட் ஐதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய மகேஷ் பாபு,

“மகரிஷி படத்தின் கதையைக் கேட்டதுமே இது நிச்சயம் வெற்றி பெறும் என நம்பினேன். படத்தின் காப்பி ரெடியானதும் தில் ராஜு படம் கண்டிப்பாக சிக்சர் என்றார்.

Maharishi is grand success in tn

2011 வேர்ல்டு கப்பில் தோனி அடித்த சிக்சர் தான் எனக்கு ஞாபகம் வந்தது.

பட வெளியீட்டிற்கு முன்பாக எனது ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்வார்கள் என இயக்குனர் வம்சி கூறியிருந்தார்.

இப்போது நானும் எனது காலரை பெருமையுடன் தூக்கிவிட்டுக் கொள்கிறேன்,” என நெகிழ்ச்சியுடன் பேசினார் மகேஷ் பாபு.

தமிழ்நாட்டில் தெலுங்குப் படமாகவே வெளியிடப்பட்ட ‘மகரிஷி’ 1 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம்.

அடுத்த சில நாட்களில் படத்தை வாங்கியவர்கள் கண்டிப்பாக லாபம் பார்ப்பார்கள் என்கிறார்கள்.

இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இப்போதே பலர் ஐதராபாத் கிளம்பிவிட்டதாகத் தகவல்.

Sending
User Review
0 (0 votes)

Rajesh Kumar

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: